இங்கிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மக்களை எரிபொருள் நிலைய உரிமையாளர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பல நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இரவு பகலாக உணவு வழங்குவதற்கு எரிபொருள் நிலைய உரிமையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
நெகிழ்ச்சி சம்பவம்
இங்கிரிய உறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் கெலும் பிரசன்ன மற்றும் அவரது குழுவினர் அனைவரும் ஆற்றிய பணியை பொது மக்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
சில எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் ஏராளமான மக்கள் உணவு இல்லாமல் பல நாட்கள் காத்திருக்கின்ற நிலையில் இந்த நபர் மிகப்பெரிய சேவையை செய்துள்ளார் என பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.