அக்னிபத் திட்டம்: பாதுகாப்பு துறை அமைச்சர் முக்கிய தகவல்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டம் பற்றி ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அக்னிபத் திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அக்னிபத் திட்டம் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும். அப்போது, குறைபாடுகளோ, சவால்களோ எழுந்தால் அவை சரி செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.