பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா- வங்கதேசம் இடையே இயக்கப்படும் மிதாலி எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் 6ந்தேதி முதல் 9 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
நியூஜல்பைகுரி- டாக்கா இடையே இந்த எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. வங்கதேச ரயில்வே விடுத்த கோரிக்கையை ஏற்று இந்தியன் ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.
ஈத் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் வழக்கம் போல இந்த ரயில் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.