ஜெ. மரண வழக்கு; ஆறுமுகசாமி ஆணையம் ஆகஸ்ட் 3ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவு

Arumugasamy commission submit final report on August 3 on Jayalalitha death case: ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 159 பேரிடம் விசாரணை மேற்கொண்டது. 154 நாட்கள் விசாரணை செய்து 149 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணை சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்: விமான நிலையத்தில் குவிந்த ஆதரவாளர்கள்

இதனையடுத்து, அறிக்கை தயாரிக்கும் பணியை ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான விசாரணை முடிந்த பின்பு அறிக்கை தயாரிக்கும் பணிக்காக கடந்த 12 நாட்களாக ஆணையத்தில் இருந்து நீதிபதி பணியை மேற்கொண்டு வந்தார்.

இறுதியாக ஆணையம் விசாரணை மேற்கொண்டபோது, ​​எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றனர். அவர்கள் தயாரித்த அறிக்கை இன்னும் ஆணையத்திடம் வழங்கப்படவில்லை. 12-வது முறை ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த 24 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில், அறிக்கை இறுதி செய்து அரசிடம் சமர்பிக்க மேலும் ஒரு மாத கால அவகாசம் கேட்டு ஆணையம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. இதை அரசு பரிசீலித்து ஆணையத்துக்கு மேலும் ஒரு மாதம் 9 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கி, 13-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காலத்துக்குள் அறிக்கையை இறுதி செய்து, ஆகஸ்ட் 3 ஆம் தேதி வழங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.