டெல்லி டிகிரி பகுதியில் மதுபான கடையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில், பெண்கள் போராட்டக்காரர்களுக்கும், மதுபான கடையின் பெண் பவுன்சர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மதுபான கடையை மூடக் கோரி கோஷம் எழுப்பிய பெண்களுக்கும், ஒயின் ஷாப் பெண் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவதம் கைகலப்பில் முடிய இரு தரப்பினர் தங்களுக்குள் சரமாரி குத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மோதலை தடுக்க காவலரையும் பெண்கள் சட்டை கிழித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.