Facebook tips and tricks 2022: இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற தளங்களின் பயன்பாடுகள் சமீபகாலத்தில் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. குறுகிய வீடியோ பகிர்வு தளங்களின் பயன்பாடுகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ளன.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பேஸ்புக்கில் நன்கு அறியாத நபர்களுடனும் பயனர்கள் நட்பு பாராட்ட முடியும். பேஸ்புக்கில், பல நண்பர் கோரிக்கைகளை அனுப்புகிறோம்.
Telecom: மாதத்திற்கு வெறும் 19 ரூபாய் போதும்… BSNL சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கலாம்!
இதுவரை எத்தனை நண்பர்களுக்கு கோரிக்கைகளை அனுப்பியுள்ளீர்கள் என்று நினைவிருக்கிறதா? உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், பேஸ்புக்கில் இதெற்கென முக்கிய பகுதி தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் டிப்ஸ்
அங்கு அத்தகைய நபர்களின் முழுமையான பட்டியலை பார்க்கலாம். உங்கள் நட்புக் கோரிக்கையை யாரும் ஏற்கவில்லை என்றால், அதை நீங்கள் எப்போது அனுப்பினீர்கள் என்பது குறித்து முழுமையான தகவலை இது வழங்குகிறது.
1G to 5G: 1G முதல் 5G மொபைல் நெட்வொர்க் வரை… வரலாற்றை திரும்பிபார்ப்போம்!
குறிப்பாக, உங்கள் நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பயனர்களின் பெயர்களையும் பேஸ்புக் காட்டுகிறது. இருப்பினும், உங்கள் நண்பர் கோரிக்கையை நிராகரித்த பயனர்கள் குறித்த தகவல் கிடைக்காது.
இலவசமாக திரைப்படங்களை பதிவிறக்க 5 சூப்பர் இணையதளங்கள்!
கோரிக்கையை நங்கள் நட்பு ஏற்காததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் தங்களின் சமூக வலைத்தள கணக்குகளைப் பயன்படுத்தாமல் இருக்கலாம் அல்லது கணக்கின் கடவுச்சொல்லை மறந்து இருக்கலாம். பேஸ்புக்கில் இதுவரை நட்புக் கோரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிய விரும்பினால், சில வழிகளை பின்பற்றவும்.
முதலில் உங்கள் பேஸ்புக் செயலியைத் திறக்கவும்.இப்போது மெனுவிற்குச் சென்று மூன்று வரி ஐகானைத் தட்டவும்.இங்கு உள்ள Friends ஆப்ஷனை கிளிக் செய்தால், நண்பர் கோரிக்கைகளை அனுப்பியவர்கள் குறித்த தகவல் கிடைக்கும்பிறகு SEE ALL விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் முழு பட்டியலையும் பார்க்கலாம்நண்பர் கோரிக்கைகளின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்க, அனைத்தையும் பார்க்க என்பதைத் தட்டவும்தேடல் பகுதிக்கு அடுத்ததாக திரையின் வலது பக்கத்தில் மூன்று புள்ளிகள் தோன்றும்.மூன்று புள்ளிகளைத் தட்டிய பிறகு, திரையின் அடிப்பகுதியில் ஒரு பாப்-அப் தோன்றும்இங்கே அனுப்பப்பட்ட கோரிக்கைகள் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்See Sent Requests விருப்பத்தைத் தட்டவும்.உங்கள் நட்பு கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால், அந்த பயனர்களுக்கு கோரிக்கை எப்போது அனுப்பப்பட்டது என்பது குறித்த முழுமையான தகவல்களை இங்கே பெறுவீர்கள்.