சென்னையில் கடன் பிரச்சனையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சாகீர் உசேன்(28). இவர் தனது தந்தை நடத்தி வந்த இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து இவர் புதிய கடை திறப்பதற்காக கடன் வாங்கியதாகவும், அதை திரும்ப செலுத்த முடியாததால் கடன் பிரச்சனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் சாகிர் உசேன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சாகீர் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.