தொண்டர்களை சந்திக்கும் சசிகலா
ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுக்கும் நிலையில் சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் திருத்தணி செல்லும் சசிகலா தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. ஜூலை 1ல் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் 35 வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் பிரிந்து காணப்படும் நிலையில் சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார். இன்று தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிறார். இதுதொடர்பாக சசிகலா அவர்கள் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்படுள்ளதாவது:
”ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி, ஜூன் 26-ம்தேதி (இன்று) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன்.
பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை,எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறேன். பிறகு, அம்மையார்குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறேன்’ என கூறியுள்ளார்.