இலங்கையின் அதிரடி அறிவிப்பு.. பணக்காரர்கள் கவலை,. ஏன் தெரியுமா?

அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தத்தளித்து வரும் இலங்கை, வாழ்வா சாவா போரட்டத்தில் இருந்து வருகிறது. கடும் போராட்டங்களை சந்தித்து வரும் இலங்கை அரசு, மறுபுறம் பிரச்சனைகளில் இருந்து மீள கடும் முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.

மொத்தத்தில் இலங்கையில் அன்னிய செலவாணி மிக மோசமாக குறைந்துள்ளது, இது உணவு பொருள்கள், எரிபொருள்கள், சமையல் கேஸ் என பல வற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

வரலாறு பிரச்சனையை சந்தித்துள்ள இலங்கை அரசு போதுமான அன்னிய செலவாணி கையிருப்பு இன்மையால், கடனையும் செலுத்த முடியாமல் தத்தளித்து வருகின்றது. நாட்டிற்கு தேவையானது அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமலும் இருந்து வருகின்றது.

இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து போச்சு.. ரணில் விக்கிரமசிங்க வேதனை

வெளி நாட்டு நாணயத்தில் கட்டுப்பாடு

வெளி நாட்டு நாணயத்தில் கட்டுப்பாடு

இந்தியா தவிர இலங்கைக்கு வேறு எந்த நாடும் உதவியளிக்க வில்லை என்பது மற்றொரு கவலையளிக்கும் விஷயம். இந்த நிலையில் தான் அன்னிய செலவாணி குறைந்து வரும் நிலையில், தனி நபர்கள் வைத்திரும் வெளி நாட்டு நாணயங்கள் வரம்பில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இலங்கை அரசு.

 எவ்வளவு வைத்திருக்கலாம்

எவ்வளவு வைத்திருக்கலாம்

இலங்கை தனி நபர்கள் வெளி நாட்டு நாணயம் வைத்திருக்கும் வரம்பினை 15,000 அமெரிக்க டாலரில் இருந்து, 10,000 டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதியில் இருந்து 14 வேலை நாட்களுக்கு ஒருமுறை அதிகப்படியான வெளி நாட்டு நாணயத்தினைடெபாசிட் செய்யவோ அல்லது டீலருக்கு விற்பனை செய்யவோ அனுமதிகப்பட்டுள்ளது.

உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வருகை
 

உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வருகை

இதற்கிடையில் இன்று இலங்கையின் பொருளாதாரத்தினை ஆய்வு செய்ய, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை குழுக்கள், இலங்கை வரவுள்ளன. இவர்கள் இலங்கை அதிபருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதுடன், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து, அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.

 கடன் கிடைக்குமா?

கடன் கிடைக்குமா?

இந்த வருகைக்கு பின்னர், இவர்களின் அறிக்கையினை ஆய்வு செய்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் உதவியினை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும் கடன் பிரச்சனையில் இருக்கும் இலங்கைக்கு பெரும் உதவிகரமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய குழுவின் திட்டம்

இந்திய குழுவின் திட்டம்

முன்னதாக இந்தியா கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மருந்துகள், எரிபொருட்கள், உரம், அத்தியாவசிய உணவு பொருட்கள் என ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்தியா அதிகாரிகள் ஆய்வு செய்துள்ள நிலையில், இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்தும் இந்த ஆய்வுக்குழுவானது பேச்சு வர்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sri lanka reduces amount of holding foreign currency to 10,000 dollar

Sri Lankan government has imposed restrictions on the amount of foreign currency held by individuals, as foreign exchange in Sri Lanka has fallen sharply.

Story first published: Sunday, June 26, 2022, 7:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.