சென்னை வடபழனியில் வேன் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கார்த்திகேயன்(37) சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனத்தில் வடபழனி மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கார்த்திகேயன் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வேன் ஓட்டுனரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.