சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது ட்வீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக மாலன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.