ஜூலை 1-ம் தேதி முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. அவற்றில் சில உங்கள் தனிப்பட்ட நிதியையும் பாதிக்கும்.
உங்கள் மாத சம்பளம் குறையும், முதலீடு பாதிக்கும், பொருட்கள் வாங்கும் போது செலவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
எனவே ஜூலை மாதம் முதல் என்ன செலவுகள் எல்லாம் அதிகரிக்கும் என்பதை இங்கு பார்த்து தெரிந்துகொண்டு கவனமாக இருங்கள்.
பான் -ஆதார் இணைப்பு
உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் அதை உடனே செய்து விடுங்கள். ஜூன் 30-ம் தேதிக்குள் பான் – ஆதார் இணைப்பைச் செய்யவில்லை என்றால் 1000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
கிரிப்டோகரன்ஸி
ஜூலை 1-ம் தேதி முதல் கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைகள் செய்ய 1 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த டிடிஎஸ் பிடித்தமானது நட்டம் நீங்கள் நட்டம் அடைந்தாலும் செலுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் சட்டம்
ஜூலை 10-ம் தேதி முதல் புதிய தொழிலாளர்கள் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதனால் உங்களது மாத சம்பளம் குறைய வாய்ப்புள்ளது. ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற புதிய தொழிலாளர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே பிஎப் பிடித்தம் செய்யும் போது கூடுதலான தொகை பிஎப் பங்கீடாக சென்றுவிடும். எனவே மாத சம்பளம் குறையும். 12 மணி நேரம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும். 5 மணி நேரத்திற்கு ஒரு முறை ஊழியர்களுக்கு இடைவேளை கண்டிப்பாக வழங்க வேண்டும்.
ஏசி விலை உயர்வு
எரிசக்தி திறன் ஆணையம் ஆற்றல் மதிப்பீட்டு விதிகளை ஜூலை 1 முதல் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது உள்ள 5 ஸ்டார் ஏசிகள் 4 ஸ்டாராக மதிப்பு குறைக்கப்படும். எனவே ஏசி நிறுவனங்கள் ஏசி விலைகளை உயர்த்த வாய்ப்புள்ளது.
சமையல் எரிவாயு
மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி சமையல் எரிவாயு எண்ணெய் விலையை மாற்றி அமைக்கும். எனவே ஜூலை 1-ம் தேதி முதல் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.
டீமேட் கணக்கு
டீமேட் கணக்கு வைத்துள்ளவர்கள் அதற்கு தேவையான KYC ஆவணங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஜூலை 1 முதல் டீமேட் கணக்கு செயல்படாது. வர்த்தகம் செய்ய முடியாது.
6 New Changes From July 1 May Impact Your Personal Finance
6 New Changes From July 1 May Impact Your Personal Finance | ஜூலை முதல் உங்கள் பாக்கெட்டை பாதம் பார்க்கும் 6 விதிகள்!