இங்கிலாந்து நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் கோலி அதிரடியாக விளையாடி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களால் ரன் மிஷின், கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட், கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசவில்லை.
தற்போது மிகவும் கடினமான இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி, அந்த நாட்டுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார்.
இது நிச்சயம் விராட் கோலிக்கு கடும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
முதல் இன்னிங்சில் விராட் கோலி பொறுமையாக விளையாடி 69 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து, 2வது இன்னிங்சில் விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். எப்போதும் 4வது இடத்தில் களமிறங்கும் அவர், இம்முறை 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்த இன்னிங்சில் விராட் கோலி பவுண்டரிகள், பந்தை அழகாக விடுதல் போன்ற டெஸ்ட் போட்டிக்கான உரித்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கோலி 98 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார்.
இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும்.இறுதியில் பும்ரா பந்துவீச்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், இந்த பயிற்சி ஆட்டத்தில் பழைய கோலியை காண முடிந்தது.
கோலி மீண்டும் அதிரடியாக பார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.