இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், இத்துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவை எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை அட்ரிஷன் விகிதம்.
இதைச் சரி செய்ய இன்போசிஸ் மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக விளங்கும்.
டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களின் முடிவு என்ன.. ஒர்க் பிரம் ஹோம் தொடருமா?
ரெசிஷன் காலம்
தற்போது உலக நாடுகளில் உருவாக இருக்கும் ரெசிஷன் காலத்திலும் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறும் நிலை உருவாகியுள்ளதால், இந்தியா ஐடி சேவை நிறுவனத்தில் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாகவே உள்ளது.
இன்போசிஸ்
இதனால் ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே பெற்ற வர்த்தகமும் சரி, புதிதாக வரும் வர்த்தகமும் சரி விரைவாக முடிக்கத் தற்போது ஊழியர்களைத் தக்க வைக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இன்போசிஸ் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
அட்ரிஷன் விகிதம்
இந்தியாவின் 4 பெரிய ஐடி சேவை நிறுவன ஊழியர்களும் அப்ரைசலுக்காகக் காத்திருக்கும் நிலையில் இன்போசிஸ் தனது ஊழியர்களைக் கட்டாயம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அட்ரிஷன் விகிதத்தையும் குறைவான அளவிலேயே வைக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
பதவி உயர்வு, ESOP
இன்போசிஸ் நிறுவனம் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் 3.5 மடங்கு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்க உள்ளதாகவும், உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ESOP பங்குகள் அளவை கடந்த 2 வருடத்தில் 2 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா
இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் அதிகப்படியான சம்பள உயர்வுக்கும், பதவி உயர்வுக்காகவும் பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறும் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது, இந்த நிலையில் இந்த அப்ரைசல் மூலம் வெளியேற காத்திருக்கும் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ளப் பதவி உயர்வு, ESOP ஆகியவற்றை அதிகரிக்கும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
27.7 சதவீதம்
மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் மட்டும் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 27.7 சதவீதமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தவில்லையெனில் இன்போசிஸ் வர்த்தகம் மொத்தமும் ஆட்டம் கண்டுவிடும்.
Infosys big plan to Retain IT Employees; 3.5 Times more promotions, doubles ESOP
Infosys big plan to Retain IT Employees; 3.5 Times more promotions, doubles ESOP இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் அப்ரைசல் வேற லெவல்..!