திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான். இதனையொட்டி, தனது ரசிகர்களுடன் உரையாட வேண்டும் என எண்ணி தனது இன்ஸ்டாகிராமில் AskSRK என்ற செஷனை நடத்தியுள்ளார்.
அதில் தனது கம்பேக், அனுபவம் உள்ளிட்ட ரசிகர்களின் பல கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்திருக்கிறார். அந்த வகையில், அட்லியுடனான ஜவான் படம் குறித்து பலவற்றை ஷாருக் பகிர்ந்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது, “ஜவான் படத்தில் அட்லிக்கும், எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. அட்லி தன்னுடைய ஐடியாக்களை கொண்டு வருவார். நான் என்னுடைய ஐடியாக்களை கூறுவேன். இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம். அது த்ரில்லிங்காகவும், உற்சாகமாகவும் இருக்கும்.” என ஷாருக் கூறியிருந்தார்.
View this post on Instagram
இதேபோல, ஜவான் படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு, “ஆம் நயன்தாராவும் ஜவான்ல நடிச்சிருக்காங்க.” எனக் கூறிய ஷாருக், “ஜவான் போன்ற படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை ஜவான் மாதிரியான படத்தில் நான் நடித்ததில்லை. இது புதுமையாக உள்ளது” என ஷாருக்கான் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
ALSO WATCH: