நாட்டு துப்பாக்கி சுட்டதில் பெண் காயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள வலசை பகுதியை சேர்ந்தவர்கள் காசிப்பிள்ளை-சாந்தகுமாரி. இவர் கிராமத்திற்கு வெளியே அவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில், வீட்டிற்கு வெளியே நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு காசிப்பிள்ளை வெளியே வெளிவந்து பார்த்த போது ரத்தவெள்ளத்தில் சாந்தகுமாரி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் அருகில் உள்ள காட்டு பகுதியில் இருந்து மர்ம நபர்கள் சுட்டது தெரியவந்தது.
அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அவரை சுட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.