கனடாவில் வயதான நபர் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது அவரிடம் இருந்து பணத்தை திருடி கொண்டு ஓடிய இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான தகவலையும், குற்றச்செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்களையும் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 23ஆம் திகதி Chinatownல் உள்ள ஹுரன் தெருவில் அமைந்துள்ள ஏ.டி.எம்மில் வயதான நபர் பணம் எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை அணுகிய இளைஞன் ஒருவர் முதியவரை கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்த பணத்தை திருடி கொண்டு தப்பி ஓடினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் நபரின் புகைப்படங்களை பொலிசார் நேற்று வெளியிட்டனர்.
அதில் அவர் தலையில் தொப்பி அணிந்துள்ளதோடு, ஜெர்சி உடையும் அணிந்திருக்கிறார்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.