தமிழ் தெலுங்கில் உருவாகி வரும் விஜய்யின் வாரிசு, இந்தியில் அமிதாப் உடனான குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு, ரன்பீர் கபூருடன் அனிமல் என படு பிசியான நாயகியாக பறந்து பறந்து நடித்து வருகிறார் இளசுகளின் நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா.
இப்படி இருக்கையில், தான் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் படபிடிப்புக்கு வருவேன் என ராஷ்மிகா மந்தனா தயாரிப்பாளரிடம் கூறியதாக சமூக வலைதளத்தில் செய்திகள் உலா வருகின்றன.
அந்த செய்தியில், “தன்னுடைய நாய் தன்னை விட்டு பிரிந்து இருக்காது என்பதால் அதற்கும் சேர்த்து பிசினஸ் க்ளாஸ் ஃப்ளைட் டிக்கெட்டும், 5 ஸ்டார் ஹோட்டலில் சகல வசதியும் செய்து தர வேண்டும் என ராஷ்மிகா டிமாண்ட் செய்ததாகவும், தயாரிப்பாளரும் ராஷ்மிகாவின் வற்புறுத்தலால் நாய்க்கும் சேர்த்து டிக்கெட் போடுவதாகவும்” குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Sorry but this made my day.. couldn’t stop laughing..
— Rashmika Mandanna (@iamRashmika) June 24, 2022
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் ராஷ்மிகாவை சாட தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் வெளியான செய்தியை பகிர்ந்த ராஷ்மிகா அதற்கு பதிலும் கொடுத்துள்ளார்.
அதில், “உங்களுக்கு என்னுடைய ஆரா (ராஷ்மிகா வளர்க்கும் நாய்) என்னுடன் வர வேண்டும் என விரும்பினால் கூட.. அவள் விரும்புவதில்லை. ஐதராபாத்தில் இருப்பதைதான் ஆரா விரும்புகிறாள். உங்களது கவலைக்கு ரொம்ப நன்றி” எனக் குறிப்பிட்டதோடு, ‘இந்த செய்தி எனது நாளை முழுமையடைய வைத்திருக்கு. சிரிப்பை அடக்க முடியவில்லை’ எனவும் ட்விட்டரில் ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.
ALSO READ: