பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிதிநிலையில் இருக்கும் வேளையில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசுக்கு கூடுதலான வருவாயை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காரணத்தால் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் மீது 10 சதவீதம் சூப்பர் டாக்ஸ் விதிக்கப்பட்ட உள்ளதாக ஜூன் 24ஆம் தேதி அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அந்நாட்டு பங்குச்சந்தையை முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் அந்நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியீட்டு நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மக்கள் யாரும் டீ குடிக்காதீங்க என்றும் நாட்டைக் காப்பாத்துங்க என்னும் கூறியுள்ளார்.
ஐகியா பெங்களூரு கிளையை மாலை 6 மணிக்கே மூட வைத்த வாடிக்கையாளர்கள்.. நடந்தது என்ன?
டீ எவ்வளவு முக்கியம்
இந்தியா மட்டும் அல்லாமல் தென் ஆசிய நாடுகள் முழுவதும் டீ என்பது மக்களின் தினசரி உணவு கட்டமைப்பில் மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் டீ குடிப்பதைக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். பல லட்சம் பேருக்கு டீ ஒரு வேளை உணவாக இருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு அதிர்ச்சியாகத் தான் உள்ளது.
பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் நாட்டின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகளுக்கான அமைச்சர் அஹ்சன் இக்பால், அதிகரித்து வரும் இறக்குமதி கட்டணத்தைக் குறைக்க டீ வாங்குவதைக் குறைக்குமாறு தன் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
1-2 கப் குறைத்திடுங்க
பாகிஸ்தான் அரசு பிற நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கடன் பெற்று தேயிலையை இறக்குமதி செய்வதால், டீ வாங்குவதைக் குறைப்பதை போல், டீ குடிப்பதை 1-2 கப் குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அஹ்சன் இக்பால் கூறியுள்ளார்.
400 மில்லியன் டாலர்
பாகிஸ்தான் 2021-22 நிதியாண்டில் 400 மில்லியன் டாலருக்கு டீ இறக்குமதி செய்துள்ளது. இது 2020-21ல் 340 மில்லியன் டாலராக இருந்தது. பாகிஸ்தான் நாட்டின் மொத்த இறக்குமதியில் தேயிலை ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
இறக்குமதி
உலகின் முன்னணி தேயிலை இறக்குமதியாளர்களில் பாகிஸ்தான் முக்கியமான நாடாக உள்ளது, பாகிஸ்தான் அரசு ஆண்டுதோறும் மத்திய வங்கியின் கடின நாணய இருப்புகளிலிருந்து சுமார் 600 மில்லியன் டாலர் தொகையை டீ இறக்குமதிக்கு மட்டுமே செலவழிக்கிறது.
பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம்
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள உயர்கல்வி ஆணையம் (HEC) நாட்டில் வளர்ந்து வரும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூர் பானங்களான லஸ்ஸி மற்றும் சத்து போன்றவற்றை உட்கொள்வதை ஊக்குவிக்குமாறு அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு
HEC இன் செயல் தலைவர் டாக்டர் ஷைஸ்தா சோஹைல் இதுக்குறித்துக் கூறுகையில் டீ-க்கு பதிலாக லஸ்ஸி மற்றும் சத்து (Sattu) குடிப்பது மூலம் நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் மற்றும் பொதுமக்களுக்கு வருமானத்தை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Pakistan Minister Ahsan Iqbal ask citizens to cut down on tea consumption
Pakistan Minister Ahsan Iqbal ask citizens to cut down on tea consumption யாரும் டீ குடிக்காதீங்க.. நாட்டைக் காப்பாத்துங்க.. பாகிஸ்தான் அரசின் கோரிக்கை..!