மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சர், சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் கைகோர்த்துள்ளார்.
ஏற்கனவே 7 அமைச்சர்கள் கவுகாத்தி நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ள நிலையில், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான உதய் சமந்த், ஆளும் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏ நரேந்திர பாண்டேகரின் பிறந்தநாளை சக எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.