விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய படங்கள் பாலிவுட்டில் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேரி கோம், சக் தே இந்தியா, எம்.எஸ்.தோனி, தங்கல், சச்சின், 83 என எக்கச்சக்கமான விளையாட்டு துறை சார்ந்த படங்கள் அதுவும் பயோபிக்காக உருவாகி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
இப்படி இருக்கையில், பல இந்திய விளையாட்டு வீராங்கனைகள் பற்றிய வாழ்க்கை வரலாறு இந்தி திரையுலகில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த படங்கள் எந்த வீராங்கனையை பற்றியது, யார் எந்த கேரக்டரில் நடிக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்:
அனுஷ்கா ஷர்மா (ஜூலன் கோஸ்வாமி)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான Chakda Xpress என்ற படத்தில் ஜூலன் கோஸ்வாமியாக நடிக்கிறார் அனுஷ்கா ஷர்மா. இந்த படம் ஜூலன் கோஸ்வாமி எப்படியெல்லாம் பெற்றோர், உறவினர்கள், சமூகம் என அனைத்தையும் சமாளித்து, தடைகளை உடைத்து எப்படி அவர் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ்ந்தார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. 2022 இறுதிக்குள் இந்த படம் OTT தளமாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டாப்சி பன்னு (சபாஷ் மித்து)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ODI போட்டிகளில் 10,000 ரன்களை குவித்தவருமான மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு குறித்த சபாஷ் மித்து படத்தில் மிதாலியாகவே நடிக்கிறார் டாப்சி பன்னு. இந்த படம் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜான்வி கபூர் (Mr & Mrs. Mahi)
Mr & Mrs. Mahi என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் ஜான்வி கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட இருக்கும் இந்த படம் தொடர்பான அறிவிப்பை தயாரிப்பாளர் கரன் ஜோஹர் கடந்த 2021ம் ஆண்டே அறிவித்திருந்தார். ஆனால் படத்தின் ஷூட்டிங் கடந்த மே 9ம் தேதிதான் தொடங்கப்பட்டிருக்கு. மஹேந்திராவாக ராஜ்குமார் ராவும், மஹிமாவாக ஜான்வி கபூரும் நடிக்கிறார்கள்.
ராஷிகா துகல் (ஸ்பைக்)
நெட் ஃப்ளிக்ஸில் வெளியான மிர்சாபுர் வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் மிக பிரபமானவர் ராஷிகா துகல். தற்போது இவர் வாலிபால் பயிற்சியாளராக நடிக்கும் மற்றுமொரு வெப் சீரிஸ்தான் ஸ்பைக். தவல் ஷா, நிஷ்தா ஷைலஜான் ஆகியோர் இயக்கும் இந்த ஸ்பைக் சீரிஸில் நடிப்பதற்காக ராஷிகா துகல் மூன்று மாதங்களாக மும்பையில் வாலிபால் பயிற்சி பெற்றிருக்கிறாராம்.
சயாமி கெர் (கூமர்)
அமேசான் ப்ரைமில் வெளியான Breathe: Into the shadows சீரிஸ் மூலம் பிரபலமானவர் சயாமி கெர் (saiyami kher). இவர் தற்போது இயக்குநர் பால்கியின் இயக்கத்திலான கூமர் என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடிக்கிறார். இதில் அபிஷேக் பச்சனும் உடன் நடிக்கிறார்.
ALSO READ: