சேலம்: உடைக்க முடியாததால் அலேக்காக உண்டியலை தூக்கிச் சென்ற திருடர்கள்!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கோயில் உண்டியலை 2 திருடர்கள் தூக்கி சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே 5வது மைலில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை இரண்டு திருடர்கள் கையில் ஆயுதங்களுடன் சென்று கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்தனர். உண்டியலை உடைக்க முடியாததால் அப்படியே தூக்கிக்கொண்டு 2 திருடர்கள் சென்ற சிசிடிவி காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திருடர்கள் இருவர் கோயில் உண்டியலை தூக்கிக் கொண்டு ஓடுவதை கண்ட அப்பகுதி டீக்கடை உரிமையாளர் லோகநாதன் கூச்சலிடவே திருடர்கள் உண்டியலை புதரில் வீசி விட்டு தப்பி ஓடினார்கள்.
image
இதுகுறித்து தகவலறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மர்மமான முறையில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்த பொழுது இவர்கள் இருவரும் திருவாக்கவுண்டனூரை சேர்ந்த மாணிக்கம் மகன் தீபன் (23), சேலம் ரெட்டி பட்டியைச் சேர்ந்த வேலு மகன் தீபன் ராஜ்(23)என்பது தெரியவந்தது.
கோயில் உண்டியல் திருடி சென்றது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் கோயில் உண்டியலை தூக்கிச் சென்றது உறுதிசெய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மேச்சேரி போலீசார் இருவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.
ALSO READ: 
`10-ல் 1 தெருவோரக்கடையில் ஒரே சமையல் எண்ணெயையே மீண்டும் மீண்டும்…’- அதிர்வூட்டும் சர்வேSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.