புடின் வேண்டுகோளை தொடர்ந்து…உக்ரைனில் களமிறங்கும் ரஷ்யாவின் மிருகத்தனமான தளபதி!


உக்ரைனில் ரஷ்யாவின் வெற்றியை துரிதப்படுத்துவதற்காக ரஷ்யாவின் ஓய்வுப்பெற்ற மிகவும் பருமனான மற்றும் மிருகத்தனமான தளபதி பாவெல்லை(67) ஜனாதிபதி புடின் அழைத்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

சுமார் 280lbs எடை கொண்ட ஓய்வுப்பெற்ற தளபதி பாவெல்(67) கடந்த 1980 ஆண்டு ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியனின் மோசமான படையெடுப்பின் ஒரு மூத்த வீரர் மற்றும் முதன்மை தளபதிகளில் ஒருவராக இருந்துள்ளார்.

40 ஆண்டுகள் வரை அனுபவம் மிக்க பாவெல், நாள் ஒன்றுக்கு ஐந்து வேலைகள் சாப்பிட்டு, 1லிட்டர் வரை வோட்கா பருக கூடியவர், இவர் தனது சேவைக்கு திரும்பியதை தொடர்ந்து, அவருக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடை மற்றும் அவரது உடலை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய இரண்டு செட் உடல் கவசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

புடின் வேண்டுகோளை தொடர்ந்து...உக்ரைனில் களமிறங்கும் ரஷ்யாவின் மிருகத்தனமான தளபதி!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் தனது ஓய்வுக்கால கழித்து வந்த பாவெல்(67), ரஷ்ய படைகளை உக்ரைனில் வழிநடத்த மீண்டும் சேவைக்கு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி புடின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து ராணுவ சேவைக்கு திரும்புயுள்ளார்.

பாவெல்(67) ரஷ்யாவின் சிறப்பு ராணுவ படையை உக்ரைனில் வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுத் தொடர்பாக மூத்த உளவுத் துறை அதிகாரி the Daily Star Sunday-க்கு தெரிவித்த தகவலில், புடின் தற்போது வோட்கா உருளைகளை துடைத்துக்கொண்டு இருக்கிறார் என தெரிவித்தார்.

புடின் வேண்டுகோளை தொடர்ந்து...உக்ரைனில் களமிறங்கும் ரஷ்யாவின் மிருகத்தனமான தளபதி!

கூடுதல் செய்திகளுக்கு: அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்த சட்டம்: ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி முடிவு!

நேற்றைய தினம் முக்கிய நகரமான செவெரோடோனெட்ஸ்கைக் ரஷ்ய படைகள் கைப்பற்றப்பட்ட போதிலும், அந்த ஆமை வேக வெற்றியை முன்னிட்டு புடின் தனது நம்பர் ஒன் ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ்-வை பதவி நீக்கம் செய்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

புடின் வேண்டுகோளை தொடர்ந்து...உக்ரைனில் களமிறங்கும் ரஷ்யாவின் மிருகத்தனமான தளபதி!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.