பிலிப்பைன்ஸ் கடலில் பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் மாயமாகியிருப்பதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுகாஸ் மற்றும் டில்மோபோ தீவுகளுக்கு இடையே 15 குழந்தைகள் உட்பட 157 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அந்த படகு சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இதில் 163 பேர் மீட்கப்பட்டு லெய்ட்டே மாகாணத்தில் உள்ள சிறிய துறைமுகத்தில் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருவதுடன், படகில் தீப்பிடித்ததற்கான காரணம் கூறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.