உகரைன் மீது தொடர்ந்து 4 மாதங்களாகப் போர் தொடுத்து வரும் ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பல்வேறு பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்து வருகின்றன.
இந்நிலையில் ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ரஷ்யாவிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதை நிறுத்தி பொருளாதார சிக்கல் ஏற்படுத்த ஜோ பிடன் தலைமையில் முடிவு செய்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்த உடன், ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை பல்வேறு மேற்கத்திய நாடுகள் நிறுத்தின.
குறைந்த விலை
உடனே கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் சரியும் வருவாயை ஈடுகட்ட, தங்களது கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலைக்கு விற்க ரஷ்யா முன்வந்தது. இந்தியாவும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள்
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடை விதித்தாலும், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிடம் தொடர்ந்து வர்த்தகத்தை செய்துதான் வருகின்றன.
தங்கம் இறக்குமதி தடை
இந்நிலையில் ரஷ்யாவுக்கு கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கும் விதமாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் ஏற்றுமதியாகும் தங்கத்தை இறக்குமதி செய்வதை நிறுத்த ஜி7 நாடுகள் முடிவு செய்துள்ளன.
ரஷ்யா
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் 10 சதவீதம் ரஷ்யாவிலிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது இந்த தங்கத்துக்கு ஜி7 நாடுகள் தடை விதிக்கின்றன. அதனால் ரஷ்யாவுக்கு மேலும் அதிகமாகப் பொருளாதார இழப்பு ஏற்படும்.
தங்கம் விலை குறையுமா?
கச்சா எண்ணெய்யைத் தொடர்ந்து தங்கத்தையும் ரஷ்யா குறைந்த விலைக்கு விற்குமா என்பது கேள்வியாக இருந்தாலும். இந்த சூழலிலும் ரஷ்யாவிடம் தொடர்ந்து வர்த்தகம் செய்வதால் அந்த பணம் உக்ரைன் மீதான போருக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
ஜி7 நாடுகள் பட்டியல்
ஜி7 நாடுகள் பட்டியலில் கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
G7 Leading Countries To Ban Import Of Rusian Gold
G7 Leading Countries To Ban Import Of Rusian Gold | கச்சா எண்ணெய்யை அடுத்து ரஷ்யாவின் தங்கத்தை இறக்குமதி செய்வதை நிறுத்தும் ஜி7 நாடுகள்!