ரூ. 4 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இனி என்னவாகுமோ?

கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது இனி வரும் வாரங்களில் என்னவாகுமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கடந்த 15 மாதங்களில் மட்டும் முதன்மை சந்தையில் இருந்து அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் 4.1 லட்சம் கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.

முதன்மைச் சந்தைகளில் வெளியேறியுள்ள முதலீடுகள் கடந்த 2008ல் வெளியேறிய முதலீடுகளை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.

உள்நாட்டு முதலீடுகள் வரத்து

இது இந்திய சந்தையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த 15 மாத காலகட்டத்தில் அன்னிய முதலீடுகள் வெளியேறியிருந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 3.3 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தில் சுமார் 80% ஆகும். இதேபோல சராசரி மாத எஸ்பிஐ முதலீடானது 12,100 கோடி ரூபாயாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சராசரி விகிதம்ன் 3700 கோடி ரூபாயாக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இந்தியா உட்பட வளர்ந்து வரும் சந்தைகளுக்கு எஃப் பி ஐகள் மீண்டும் வரத் தயங்குவதற்கு மூன்று காரணிகள் உள்ளன.

அவற்றில் முதல் காரணி- கச்சா எண்ணெய் விலை. பொருளாதாரம் சரிவடையலாம் என்ற அச்சத்தின் மத்தியில், சப்ளை சங்கிலியில் தொடர்ந்து பல சிக்கல்கள் உள்ளன.

ரூபாய் மதிப்பு சரியலாம்
 

ரூபாய் மதிப்பு சரியலாம்

அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு காரணமாக , மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பு குறையலாம். ஏற்கனவே அமெரிக்காவின் மத்ய வங்கியானது 75 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்புக்கு பிறகு, ரூபாய் மட்டும் சரிவினைக் கண்டுள்ளது.

பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மேற்கொண்டு சந்தை சரிய காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கு, வருடங்களிலும் அதிகரிக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சவாலான காலகட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. சர்வதேச அளவிலும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சமே எழுந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.4 lakh crore gone in 15 months: check details

In the last 15 months alone, foreign portfolio investment in the Indian market has flowed out by Rs 4.1 lakh crore. At the same time, domestic investors bought shares worth Rs 3.3 crore.

Story first published: Sunday, June 26, 2022, 18:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.