திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பழனி பிரதான மலைச்சாலையில் தற்கொலை செய்வதற்காக சொகுசு காருடன் 100அடி பள்ளத்தில் விழுந்தவர் காயங்களுடன் உயிர்தப்பினார்.
புல்லூர் எஸ்டேட் அருகே 100 அடி பள்ளத்தில் சொகுசு கார் ஒன்று விழுந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து 108 ஆம்புலென்ஸ் பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து காரில் இருந்த நபரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக கொடைக்கானல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பரசன் என்பதும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்து இங்கு வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.