அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடிபழனிசாமி தலைமையில் தொடங்கியது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை காலாவதி ஆகி விட்டதாக எடப்பாடிபழனிசாமி தரப்பு கூறிவரும் நிலையில், தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவியை வகிக்கும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடப்பட்டது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வருகை; செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக தலைமை கழகம் வந்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவியை பறித்தாலும், ஓ பன்னீர்செல்வம் இடம் பொருளாளர் என்ற முக்கிய பொறுப்பு உள்ளது. தற்போது அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.