சமூக நீதியை உண்மையாக கடைபிடிப்பவராக மு.க.ஸ்டாலின் இருந்தால், பாஜக ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை அவர் ஆதரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல் . முருகன், பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், ‘வாஜ்பாய் பிரதமாராக இருந்தபோது, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கினார். அவரை இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆக்க முற்சித்த போது கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், ஜானதிபதியாக பாஜக ஆக்கியது. தற்போது பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்முவை ஜானாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி உள்ளது. தங்களை சமூகநீதி காவலர்கள் என்று கூறும் சிலர் பழங்குடியின வேட்பாளரை எதிர்கின்றனர். தற்பொது ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. திமுக உண்மையாக சமூக நீதியை கடைபிடிக்கிறது என்றால் மு.க.ஸ்டாலின் பாஜக ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“