திருநெல்வேலியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வெட்டியபந்தி பகுதியிலிருந்து கேடிசி நகர் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆறு மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளது. வசவப்பபுரம் – செய்துங்கநல்லூர் சாலையில் வந்தபோது ஆட்டோ எதிர்பாராமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவிற்கு அடியில் சிக்கிய 5 வயது செல்வ நவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 குழந்தைகள் காயங்களுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் செல்வ நவீன் கேடிசி நகரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM