மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடுகளில் இன்னும் 2 மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அடுத்தச் சில நாடுகளில் நடக்க உள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாகப் பல மாதங்களாகப் பேசப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரிப் பலகையில் மறுசீரமைப்பு இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கியமான விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இதேவேளையில் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், பணவீக்கம் இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி வரிப் பலகையில் மாற்றங்கள் இருக்காது எனத் திட்டவட்டமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இக்கூட்டத்தில் சில முக்கியமான சேவைகளுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இது எந்த விஷயம் எனத் தெரிந்துகொள்ளுங்கள்..!
ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் மார்ச் 20226 வரை நீட்டிப்பு..!
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
இந்த வாரம் நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் மாநில நிதியமைச்சர்கள் குழுவின் முன்மொழிவை பரிசீலிக்கும் என்று அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
28 சதவீத ஜிஎஸ்டி வரி
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு, ஆன்லைன் கேமிங்கிற்கு விளையாட்டில் பங்கேற்பதற்காக மக்கள் செலுத்தும் போட்டி நுழைவுக் கட்டணம் உட்பட முழு மதிப்பிலும் வரி விதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ரேஸ் கோர்ஸ், கசினோ
இதன் மூலம் ரேஸ் கோர்ஸ்-ல் அனைத்துச் செலுத்தப்படும் தொகைக்கு மட்டும் அல்லாமல் வெற்றி பெறும் தொகைக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதேபோலத் தான் கசினோவிலும் பெட்டிங் வைக்கப்படும் தொகைக்கும் சரி, சிப்ஸ், காயினாக வாங்கப்படும் தொகைக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.
கசினோ உணவு
இதேபோல் கசினோவில் நிழைவு கட்டணம் முதல் அங்கு வாங்கும் உணவு, குளிர்பானம், மதுபானம் என அனைத்திற்கும் 28 சதவீதம் வரி விதிக்கப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு ஒப்புதல் பெற்றால் இத்துறையைப் பெரும் பாதிப்பாக அமையும். தற்போது ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
சண்டிகர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
இந்த வாரம் சண்டிகரில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒரு சில பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய வாய்ப்பு உள்ளது மற்றும் 215 க்கும் மேற்பட்ட பொருட்களின் விகிதங்களில் தற்போதைய நிலையில் இருந்து எவ்விதமான மாற்றங்களையும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் ஜூன் 28-29 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது.
GST Council Meet June 28-29: 28% GST likely on casinos, online gaming, horse races
GST Council Meet June 28-29: 28% GST likely on casinos, online gaming, horse races 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!