பிரான்ஸ் இளைஞரை திருமணம் செய்த தமிழ்ப்பெண்! பட்டு வேட்டி, பட்டு சேலையில் அழகிய புகைப்படங்கள்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரை தமிழ்ப்பெண் ஒருவர் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா.
பொறியாளரான இவர் சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் உடன் பணிபுரிந்த பிரான்ஸை சேர்ந்த பென்னடி – அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான பொறியாளர் அசானே ஒச்சோயிட் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதுகுறித்து பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.

பிரான்ஸ் இளைஞரை திருமணம் செய்த தமிழ்ப்பெண்! பட்டு வேட்டி, பட்டு சேலையில் அழகிய புகைப்படங்கள்

இதையடுத்து தமிழ் முறைபடி திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.
தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதன்படி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார் அசானே.
இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தினரும், பட்டுவேட்டி, பட்டுசேலையில் இருந்தனர்.

திருமண விருந்தில் இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம் அல்வா ஆகியவற்றை பிரான்ஸ் நாட்டினர் விரும்பி உண்டு மகிழ்ந்தனர்.  

பிரான்ஸ் இளைஞரை திருமணம் செய்த தமிழ்ப்பெண்! பட்டு வேட்டி, பட்டு சேலையில் அழகிய புகைப்படங்கள்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.