உக்ரைன் இளைஞர் ஒருவர் ரஷ்ய ஏவுகணை வீட்டை துளைத்து நின்றபோதிலும் , அதற்கு அருகிலேயே நின்று ஒன்றும் நடக்காதது போல கூலாக முகச்சவரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 4 மாதங்களைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் உக்ரைன் கடுமையான உயிரிழப்புகளையும் பொருளிழப்புகளையும் சந்தித்து வந்தாலும் உக்ரைனியர்கள் ரஷ்யப் படையினருக்கு எதிராக கைகளில் ஆயுதங்களுடன் வீதிகளில் இறங்கி பதிலுக்கு போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. உக்ரைனில் உள்ள ஒரு வீட்டை, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று துளைத்துள்ளது.
ஆனால் அந்த வீட்டின் உரிமையாளரான 35 வயது மதிக்கத்தக்க நபர், மறுதினம் காலையில் அந்த ஏவுகணைக்கு பக்கத்தில் நின்றபடி அசால்ட்டாக தனது தாடியை சவரம் செய்து கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.