பிரபல மலையாள நடிகர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

பிரபல மலையாள நடிகர் பிரசாத் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 43.

பிரபல மலையாள நடிகரான என்.டி.பிரசாத் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர். நிவின் பாலி நடிப்பில் வெளியான ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ என்ற படத்தில் வில்லனாகவும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் என்.டி.பிரசாத் நேற்று இரவு தனது வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 43. கொச்சி அருகிலுள்ள களமச்சேரியை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.

image

மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக என்.டி.பிரசாத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் போதைப் பொருளுடன் பிடிபட்டது உட்பட பல வழக்குகளில் நடிகர் என்.டி.பிரசாத் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பிரசாத் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.