அரபிந்தோ பார்மாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள செபி.. ஏன்.. எதற்காக?

இந்தியாவின் முன்னணி மருத்துவ நிறுவனமான அரபிந்தோ பார்மா (APL), ஹைத்ராபாத்தில் உள்ள அதன் உற்பத்தி நிலையங்களில் ஒன்றின் தற்போதைய தணிக்கை மற்றும் USFDA விடுத்த எச்சரிக்கை குறித்து, நிறுவனம் முழு தகவலையும் வெளியிடத் தவறியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பங்கு சந்தை பரிவர்த்தனை வாரியமான செபி (SEBI), அரபிந்தோ பார்மா நிறுவனத்திற்கு எச்சரிக்கை கடிதம் வெளியிட்டதாகவும், இது அரபிந்தோ பார்மா நிறுவனம் மிகக் குறைந்த தகவல்களை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி காணலாம்.. எச்சரிக்கும் நிபுணர்களின் கணிப்பு..!

ஒழுங்குமுறை தாக்கல்

ஒழுங்குமுறை தாக்கல்

இது குறித்து அரபிந்தோ பார்மா 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் யூனிட் 1 மற்றும் USFDA மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நிறுவனத்தின் குறிப்பிட்ட வெளிப்பாடுகள் தொடர்பான கடிதம் என்று ஒரு ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

எச்சரிக்கை கடிதம்

எச்சரிக்கை கடிதம்

ஜுன் 24, 2022 அன்று நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட செபியின் கடிதம், அரபிந்தோ பார்மாவுக்கு ஏபிஐ தொடர்பான மற்றும் USFDA வழங்கிய எச்சரிக்கை கடிதம் தொடர்பாக வழங்கப்பட்ட எச்சரிக்கை கடிதமாகும்.

எதற்காக எச்சரிக்கை
 

எதற்காக எச்சரிக்கை

பார்மா நிறுவனம் பல கருத்துகளையும் மறைத்து மிக குறைந்த தகவல்களை வெளியிட்ட நிலையில், USFDA வழங்கிய எச்சரிக்கை கடிதம் மட்டுமே உண்மையாக வெளிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் மற்ற காரணங்கள் என்ன? என்பனவற்றை நிறுவனம் முழுமையாக வெளியிடவிலை என செபி தெரிவித்துள்ளது.

ஏபிஎல் அறிக்கை

ஏபிஎல் அறிக்கை

அரபிந்தோ பார்மாவால் வெளியிடப்பட்ட இரண்டு அறிவிப்புகளும், ஏபிஎல் தீவிரமானதாக கருதப்படவில்லை. ஆபத்தை தணிக்க USFDA வழங்கிய எச்சரிக்கை கவனிக்கப்பட்டு வருவதாகவும், அதனை சரிசெய்யும் நிலை குறித்து USFDA-க்கு தொடர்ந்து கண்கானிக்கப்பட்டும்  வருகின்றது. ஆனால் ஏபிஎல் அறிக்கை தீவிரமானதாக இல்லை, இது ஏற்றுக்கொள்ளதக்கதாக இல்லை என செபி தரப்பு கூறப்படுகிறது.

பங்கு விலை நிலவரம்?

பங்கு விலை நிலவரம்?

இப்பங்கின் விலையானது என் எஸ் இ-யில் 1% குறைந்து, 521.25 ரூபாயாக சரிவில் முடிவடைந்தது. இதன் 52 வார உச்சம் 1013 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 503.45 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலை 1% குறைந்து, 521.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 1012.9 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 503.40 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Aurobindo pharma received sebi’s warning letter over ongoing USFDA audit

Aurobindo Pharma is said to have failed to publish the current audit of one of its manufacturing facilities in Hyderabad and the findings and findings of the US Food and Drug Administration.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.