பிரபல நடிகர் ‘பூ’ ராமு உயிரிழந்தார்


கடந்த 2008ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் ‘பூ’ ராமு.

‘பூ’ படத்தில் பிரபலமானதால் தன் பெயருக்கு முன்னாள் ‘பூ’ ராமு என்று சேர்த்துக் கொண்டார்.

அதன் பிறகு தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இன்னும் சில படங்களில் ‘பூ’ ராமு நடித்து வந்த நிலையில், இன்று திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் ‘பூ’ ராமுவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

பிரபல நடிகர்  ‘பூ’ ராமு உயிரிழந்தார் | Actor Poo Ramu Passed Away

‘பூ’ ராமு விரைவில் நலம் பெற வேண்டும் என்று திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ‘பூ’ ராமு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

இவருடைய மரணம் சினிமாத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் ‘பூ’ ராமுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல் நடிப்பில் வெளியான ‘அன்பே சிவம்’ படத்தில் ‘பூ’ ராமு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.