காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 22-ம்தேதி காலை 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின.
நிலநடுக்கத்துக்கு 1,150 பேர் உயிரிழந்ததாகவும் 1,600 பேர் காயம் அடைந்ததாகவும் தலிபான்ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆப்கனில் நிலநடுக்கத்துக்கு உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. பக்திகா மாகாணத்தில் நிலநடுக்கத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கயான் மாவட்டத்தில் அதிக குழந்தைகள் இறந்துள்ளன.
பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் மேலும் 250 குழந்தைகள் காயம் அடைந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு நேற்று முன்தினம் தெரிவித்தது.