அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஒருங்கிணைப்பாளர் பதவியை காலாவதி ஆகி விட்டதாக எடப்பாடிபழனிசாமி தரப்பு கூறிவரும் நிலையில், அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டு, புதிய பொருளாளராக கேபி முனுசாமியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் திருமாறனுடன் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்ட வல்லுநர்களுடன் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தயுள்ளார். சட்ட வல்லுநர்களுடன் இன்று 2வது நாளாக ஆலோசிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.