12 கிலோ எடையுள்ள தங்க நாணயத்தை தேடும் வேட்டையில் மத்திய அரசு 35 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் ஈடுபட்டு வருகிறது.
இந்த தங்க வேட்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் விரைவில் அந்த தங்க நாணயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவில்லையா..விமான துறையில் 3 நாட்களில் 57,000 இளைஞர்கள் விண்ணப்பம்.. !
முகலாய அரசரான ஜஹாங்கீர் காலத்தில் உருவான இந்த 12 கிலோ தங்க நாணயம் விலை மதிப்பற்றது என்று கூறப்படுகிறது.
12 கிலோ தங்க நாணயம்
முகலாய அரசரான ஜஹாங்கீர் காலத்தில் 12 கிலோ எடையுள்ள இரண்டு தங்க நகைகள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் ஒரு நாணயம் ஜஹாங்கீர் இடம் இருந்து ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு கொடுக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் நிஜாம்
ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகானிடம் இருந்து ஹைதராபாத் நிஜாம் முக்கரம் ஜாவ் என்பவருக்கு தான் கடைசியாக இந்த தங்க நாணயம் கிடைத்ததாகவும் வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஈரான் தூதர்
அதே நேரத்தில் மற்றொரு 12 கிலோ தங்க நாணயம் ஈரான் நாட்டின் தூதர் யாத்கர் அலி என்பவருக்கு கொடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 1988ஆம் ஆண்டு தனது நிறுவனங்களுக்கு கடன் பெறுவதற்காக இந்த தங்க நாணயத்தை முக்கரம் ஜாவ் விற்க முயன்றதாக தெரியவந்தது.
மத்திய அரசு
ஹைதராபாத்தின் பெருமையாக கருதப்படும் இந்த நாணயத்தை அப்போதைய மத்திய அரசு சிபிஐ அதிகாரிகளை வைத்து மீட்பதற்காக பெரும் முயற்சி செய்தது. ஆனாலும் அதற்கு பலனளிக்கவில்லை.
35 ஆண்டுகள்
இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் அந்த தங்க நாணயத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கியுள்ளதாகவும் இந்த முறை நிச்சயம் இந்த நாணயத்தை மீட்கும் நடவடிக்கையில் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த தங்க நாணயம் குறித்து வேறு எந்த தகவலும் வெளிவராத நிலையில் அந்த தங்க நாணயத்தை மத்திய அரசு எப்படி கண்டுபிடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வரலாற்று ஆசிரியர்
இந்த தங்க நாணயம் குறித்து ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர் சல்மா அகமது ஃபரூக்கி என்பவர் கூறிய போது ‘இந்த நாணயம் விலை மதிப்பற்றது என்றும், ஹைதராபாத்தை பெருமைப்படுத்தும் நாணயம் என்றும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாணயத்தை கண்டுபிடிப்பதற்கான புதிய முயற்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
தொடரும் தேடுதல் வேட்டை
இந்த நாணயம் குறித்து விசாரணை செய்து வரும் சிபிஐ அதிகாரிகள் வரலாற்று ஆசிரியர்களிடம் தங்கள் விசாரணை விபரங்களை பகிர்ந்துள்ளனர் என்றும் விசாரணையில் இருந்த ஒரு பகுதி சிபிஐ அதிகாரிகள் தற்போது பதவியில் இல்லை என்றாலும் இந்த தேடுதல் வேட்டை முடிவில்லாதது என்றும் சல்மா அகமது ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.
சிபிஐ அதிகாரிகள்
சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் சாந்தோனு சென் எழுதிய புத்தகம் ஒன்றில் ‘ஜஹாங்கீர் காலத்திலான இரண்டு தங்க நாணயங்களை அச்சிட்டத்தை சிபிஐ அதிகாரிகள் கண்டு பிடித்தது உண்மைதான் என்றும் ஒன்று ஈரான் நாட்டின் தூதர் யார்க்கர் அலியிடம் வழங்கப்பட்டது என்றும் மற்றொன்று ஹைதராபாத் நிஜாமின் சொத்தாக மாறியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Central Government renews its hunt for world biggest gold coin!
Central Government renews its hunt for world biggest gold coin | ஒரு தங்க நாணயத்தின் எடை 12 கிலோ: தங்க வேட்டையில் களமிறங்கிய மத்திய அரசு