சென்னை: விளையாட்டுத்துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோருக்கு ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.