MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, திட்டமிட்டப்படி ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு காலதாமதாக நடைபெற்றதால், இந்த ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும் என சில மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேபோல பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வும், ஜெ.இ.இ. மெயின் தேர்வும் திட்டமிட்டப்படி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.