தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணமல் சர்வதேச சந்தையில் நிதானமாக வர்த்தகமாகி வருகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையிலும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இதற்கிடையில் ஆபரண தங்கம் விலை எப்படி இருக்கு? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையானது இன்று பத்திர சந்தை ஏற்றம், டாலர் மதிப்பினால் பெரியளவில் ஏற்றம் காணமல் உள்ளது.
எனினும் ஜி7 நாடுகள் ரஷ்யாவின் தங்கத்திற்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இது குறித்து முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
டாடா குழுமத்தின் பெரும் பங்குதாரர் பலோன்ஜி மிஸ்திரி 93 வயதில் மறைந்தார்..!
தங்கத்திற்கு தடையா?
தங்கத்திற்கு தடை விதிக்கப்படுமேயானால் இது எந்தளவுக்கு விலையேற்றத்திற்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
அதோடு தங்கத்தின் முக்கிய நுகர்வோரான சீனாவில் தேவை கடந்த மாதமே அதிகரிக்க தொடங்கி விட்டது. இது இனி வரும் மாதங்களிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதே நிலை தான் இந்திய சந்தையிலும் நிலவி வருகின்றது.
வாங்க பரிந்துரைக்கும் நிபுணர்கள்
பணவீக்கம், வட்டி அதிகரிப்பு, ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை என பலவற்றையும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா போரும் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. ஆக முதலீட்டு ரீதியாகவும் சரி, பாதுகாப்பு ரீதியாகவும் தங்கம் விலை மேற்கொண்டு அதிகரிப்பதற்காக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஆக தங்கத்தினை வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 4770 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு, 5203 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 41,624 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,030 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையில் மாற்றம் இல்லாவிட்டாலும், ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 40 பைசா குறைந்து, 65.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 656 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 65,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
gold price may rise in coming days: buy on dips
While there has been no major change in the international market, the price of jewelery gold has not changed so far today.