மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 3 நாள் தொடர்ந்து உயர்வுடன் இருந்த காரணத்தால் மகிழ்ச்சியுடன் இன்று வர்த்தகம் செய்ய வந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து சரிவுடன் இருக்கும் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரையில் சரிந்து அதிர்ச்சி கொடுத்தது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட 1 டாலர் உயர்வும் ஆசிய பங்குச்சந்தையைச் சரிவுக்குத் தள்ளியது. இதன் வாயிலாக இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பை புதிய வரலாற்றுச் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
நிஃப்டி-யில் டைட்டன் பங்குகள் அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் 3 சதவீதமும், சோமேட்டோ மீண்டும் 6 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது.
Jun 28, 2022 11:27 AM
மோசமான வர்த்தகத்திலும் ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு
Jun 28, 2022 11:27 AM
மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் 2.93 சதவீதம் உயர்வு
Jun 28, 2022 11:26 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.5963 வரை சரிந்து வரலாற்று சரிவை எட்டியுள்ளது
Jun 28, 2022 11:26 AM
அமெரிக்காவின் Wockhardt நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற ஜெனரிக் மருந்துகளை கிளென்மார்க் பார்மா கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது
Jun 28, 2022 11:26 AM
இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடு வாங்குபவர்களுக்கு ரூ.6.46 கோடிக்கு மேலான உள்ளீட்டு வரிக் கடன் சலுகைகளை வழங்கவில்லை என தேசிய லாப எதிர்ப்பு ஆணையம் (NAA) கண்டறிந்துள்ளது.
Jun 28, 2022 11:26 AM
கச்சா எண்ணெய் சரிவால் ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு
Jun 28, 2022 11:25 AM
சோமேட்டோ பங்குகள் 2வது நாளாகா 6 சதவீதத்திற்கு கீழ் சரிந்துள்ளது
Jun 28, 2022 11:25 AM
சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Jun 28, 2022 11:24 AM
ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி 93 வயதில் மறைந்தார்
Jun 28, 2022 11:24 AM
பிஐ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.13 சதவீதம் சரிவு
Jun 28, 2022 11:24 AM
இன்று இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த நாள்
Jun 28, 2022 11:24 AM
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்-க்கு பிறந்த நாள்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
Sensex nifty live updates today 28 june 2022 : oil price russia ukraine crisis sgx nifty futures wall street
Sensex nifty live updates today 28 june 2022 : oil price russia ukraine crisis sgx nifty futures wall street 3 நாள் கூடத் தாக்குப் பிடிக்காத மும்பை பங்குச்சந்தை.. 333 புள்ளிகள் சரிவு..!