பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இருப்பவர் பிளாக் பாண்டி.
இவர் கில்லி, ஆட்டோகிராப், லீ, அங்காடி தெரு, சாட்டை போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகராக மட்டுமின்றி இவர் ’உதவும் மனிதம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பொருளாதார சிக்கலால் தத்தளித்து வரும் இலங்கைக்கும் அங்கு உள்ள தமிழ் மக்களுக்கும் உதவுவதற்காக அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள டக்ளஸ் தேவானந்தா, தமிழக மக்களிடம் இருந்து பொருட்களை சேகரித்து எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணியை சிறக்க எனது வாழ்த்துக்கள்
உங்கள் செயலால் இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழக மக்களுக்குமான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையுடன் உங்கள் பணியைத் தொடங்கலாம். ஈழத்தமிழ் மக்கள் சார்பாகவும் இலங்கை அரசு சார்பாகவும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை கப்பல் சேவை மூலம்கொண்டு வர நான் ஏற்பாடு செய்கிறேன் என உறுதி கூறியுள்ளார்.