திருவள்ளூர் மாவட்டம், கொசவன்சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு திருமணமாகி கயல்விழி என்ற மனைவியும் பவன் என்ற குழந்தையும் உள்ளனர்.
பவன் சம்பவத்தன்று, வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த டிராக்டர் பவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள டிராக்டர் ஒட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.