செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பாபு(27). இவர் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் பாபு வீட்டில் உள்ள மின்விசிறியில் பழுதடைந்து விட்டதால், காரில் இருந்த சிறிய மின்விசிறி பயன்படுத்துவதற்காக, மின் இணைப்பு கொடுத்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.