வாழ்க்கையின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும், பெண்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயதாகும்போது, எலும்பு மற்றும் தசை வலிகள், எடை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன.
ஒரு பெண் 40 வயதை அடையும் போது, மாதவிடாய் நிற்கும் கட்டம் தொடங்குகிறது, இந்த சமயத்தில் சிலர் உடல் எடை அதிகரிக்கும் போது, சிலர் விரைவாக எடை இழக்கிறார்கள். பல பெண்கள் தசை மற்றும் எலும்பு வலி, தோல் பிக்மென்டேஷன், நரை முடி போன்ற பிரச்னைகளை அனுபவிக்கின்றனர்.
ஒரு பெண் நீண்ட கால நல்வாழ்வை நோக்கி உழைக்க வேண்டும், மாறாக குறுகிய காலத்திற்கு விரைவான முடிவுகளைக் காண்பிக்கும் முறைகளை நம்பியிருக்க கூடாது என்று, பிரபல ஃபிட்னெஸ் பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவாலா கூறுகிறார்.
அவர் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் பின்பற்ற வேண்டிய, மூன்று எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பட்டியலிடுகிறார். படிக்கவும்.
பகலில் 30 நிமிடம் உடலசைவு
40 வயதிற்குட்பட்ட பெண்கள் அடிக்கடி சோர்வு பற்றி புகார் கூறுகின்றனர், உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதை எதிர்த்துப் போராடலாம். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான ஜம்ப்-ஸ்டார்ட்டை அளிக்கிறது.
உடற்பயிற்சி செய்வது என்பது ஜிம்மிற்குச் செல்வதைக் குறிக்காது, எளிமையான நடைப்பயிற்சி, ஜாகிங், பைலேட்ஸ் அல்லது ஸ்குவாட்ஸ் பயிற்சி கூட வேலை செய்யும்.
உங்கள் உணவில் பாதாமை சேர்க்கவும்
பாதாம் போன்ற பருப்புகளில் புரதம் நிறைந்துள்ளது, இது ஆற்றல் விளைவிப்பது மட்டுமல்லாமல், தசை வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் பங்களிக்கிறது.
ஒரு கைப்பிடி பாதாம் பசியைத் தடுக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளின் பிளட் சுகர் தாக்கத்தை குறைக்க பாதாம் உதவும். லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் பருப்பை நள்ளிரவில் சிற்றுண்டியாக உண்பது, ஒட்டுமொத்தமாக பசியின்மை குறைந்து, அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணும் மயக்க ஆசையை அடக்கியது.
முழுமையான உணவில் கவனம் செலுத்துங்கள்
பல பெண்கள் பசியின்மை அல்லது அதிக உணவுக்கு ஏங்குவது பற்றி புகார் கூறுகின்றனர். புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றை சமன் செய்யும் சத்தான உணவை உட்கொள்வதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். உணவைத் தவிர்ப்பதைத் தவிர்க்கவும். உங்கள் உணவில் அதிக முளைவிட்ட, இலைக் காய்கறிகள், பருவகால பழங்கள் மற்றும் இறைச்சியைச் சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“