கர்நாடகாவில் லேசான நில அதிர்வு| Dinamalar


மங்களூரு: கர்நாடகாவில், தக்ஷின கன்னட மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று(ஜூன் 28) காலை 7: 45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.5 ஆக பதிவானது.சம்பஜே, அரன்தோடு, பேரஜே, ஜல்சூர், உபரட்கா, தோடிகனா மற்றும் மிட்டூர் பகுதிகளில் சுமார் 4 நொடிகள் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 25ம் தேதி ரிக்டரில் 2.3 என்ற அளவில் கர்நாடகாவில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.