ஜேர்மன் நகரமொன்றில், தன் வீட்டின் அருகிலேயே பண்ணை ஒன்றை வைத்து 110 பாம்புகளை வளர்த்துவந்துள்ளார் ஒரு இளம்பெண்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, Salzgitter என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு வந்த 35 வயது பெண் ஒருவர், தன்னை பாம்பு ஒன்று கடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது நிலைமை மோசமாகவே, Hamburgஇலுள்ள சிறப்பு நிறுவனம் ஒன்றில் பாம்புக்கடி மருந்துக்கு ஆர்டர் செய்த மருத்துவர்கள், பொலிசாருக்கும் தகவலளித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பண்ணைக்குச் சென்ற பொலிசார், அங்கு ஏராளமான பாம்புகள் வளர்க்கப்பட்டு வருவதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவற்றில் 110க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளும் அடக்கம்.
நிபுணர்கள் உதவியுடன் பாம்புகளைக் கைப்பற்றிய பொலிசார், என்னென்ன விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.