ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிந்தகவுண்டம் பாளையம் அடுத்த காட்டுபாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்த சொக்கப்பனின் மகன் கார்த்தி (வயது19).
இவர் அந்தியூர் அருகே உள்ள பாட்டப்பன் கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தியூர்-பவானி சாலையை கடக்க முயன்ற போது அந்தியூர் நோக்கி வந்த லாரி எதிர்ப்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த கார்த்திகை மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.